தினக்கூலி ஊழியர்களுக்கும் 7வது ஊதியக்குழு சம்பளம்: அரசு ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்

காரைக்கால், நவ. 13: காரைக்கால் மாதூர் வேளாண் அறிவியல் நிலைய தினக்கூலி ஊழியர்களுக்கும் 7வது ஊதியக்குழு சம்பளம் வழங்க அரசு ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ரத்தின சபாபதியை, அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவ தலைவர் ஜெய்சிங், பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் வேளாண் அறிவியல் நிலைய அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசினர்.அப்போது 7வது ஊதியக்குழு ஊதியத்தை பஜன்கோவா தினக்கூலி ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் காரைக்கால் மாதூர் வேளாண்அறிவியல் நிலையத்தில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் உயர்த்தி வழங்க வேண்டும்.

20 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலிகளாக பணியாற்றி வரும் ஊழியர்களை பணிமூப்பு அடிப்படையில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.அப்போது சங்க நிர்வாகிகள் ஸ்டீபன், இளங்கோவன், கருப்பையா, தேவதாஸ், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories:

>