சட்டம்- ஒழுங்கு சீர்குலைவுக்கு கவர்னர் காரணம்?.. முதல்வருக்கு அன்பழகன் கேள்வி

புதுச்சேரி, நவ. 13: புதுச்சேரியில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவுக்கு கவர்னர்தான் காரணமென ஆட்சியாளர்கள் கூறலாம் என சட்டமன்ற அதிமுக கட்சி தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர்  நாராயணசாமி தனது சொந்த செலலில் சிங்கப்பூருக்கு சென்று தொழில் முதலீடுகளை  ெகாண்டு வருவதற்காக முயற்சி எடுத்ததற்கு எங்களது பாராட்டுக்களை  தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் கேசினோ, மால் போன்ற பல்வேறு  முதலீடுகளை கொண்டு வர மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பதை  தெரிவிக்க வேண்டும். புதுவையில் புதிய தொழிற்கொள்கை ஆரம்பித்து ஒரே ஒரு  தொழிற்சாலை கூட கொண்டு வரவில்லை. மாறாக ஏற்கனவே செயல்பட்ட கம்பெனிகளை  மூடிவிட்டு ெசன்றுவிட்டனர். இந்நிலையில் 3 ஆயிரம் கோடி முதலீடு  புதுச்சேரிக்கு தொழிற்சாலைகள் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக கூறுவதில் எந்தளவுக்கு  உண்மை என்று தெரியவில்லை.

சட்டம்- ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என  பலமுறை தெரிவித்துள்ளோம். இலவச அரிசி, இலவச துணி, வேலைவாய்ப்பு  எல்லாவற்றையும் கவர்னர் தடுக்கிறார் என கூறி வருகிறார். சட்டம்- ஒழுங்கு  சீர்குலைவுக்கும் கவர்னர் தான் காரணம் என  ஆட்சியாளர்கள் சொன்னாலும்  ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சட்டம் ஒழுங்கு சீர்குலைவின் மீது உறுதியான  நடவடிக்கை எடுக்காததால் புதுச்சேரி மக்கள் வாழும் தகுதியை இழந்து விட்டது. ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை இல்லாததால் மிகுந்த பலகீனமான நிலையில்  இந்த அரசு உள்ளது.

அங்கன்வாடி பணியாளர் அறிவிப்பாணை ரத்து  செய்யப்பட்டதில் நடந்த திரைமறைவு நாடகங்கள் என்ன?. மக்களை ஏன்  ஏமாற்றுகிறீர்கள். அங்கன்வாடி பணியாளர் பிரச்னையில் உரிய விதிமுறைகள்  கடைபிடிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மையங்களின் அருகே  பணியாற்றும் தகுதியானவர்களுக்கு ேவலையை கொடுத்திருக்க வேண்டும். ஆனால்  ஓப்பன் கால்பர் என்ற பெயரில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, தற்போது ரத்து  செய்யப்பட்டுள்ளது. ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக மக்கள்  பாதிக்கப்பட வேண்டுமா? இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>