×

இஎஸ்ஐ மாதிரி மருத்துவமனை புதுச்சேரியில் அமைக்க நடவடிக்கை: ஆய்வுக்குப்பின் வைத்திலிங்கம் எம்பி பேட்டி

புதுச்சேரி, நவ. 13: புதுச்சேரி இஎஸ்ஐ மருத்துவமனையில் வைத்திலிங்கம் எம்பி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், இஎஸ்ஐ மாதிரி மருத்துவமனை கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். புதுச்சேரி கோரிமேட்டில் அரசு தொழிலாளர் காப்பீட்டு கழக (இஎஸ்ஐ) தலைமை மருத்துவமனை உள்ளது. 75 படுக்கை வசதியுடன் செயல்படும் இந்த மருத்துவமனையில் இஎஸ்ஐ பதிவு பெற்ற தொழிலாளர்கள், அவரது குடும்பத்தினர் சிகிச்ைச பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம் நேற்று இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு வார்டுக்கும் ெசன்று மருத்துவ வசதிகளை பார்வையிட்டார். மேலும் அங்கு சிகிச்ைச பெறும் நோயாளிகளிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார். உள்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு, வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

பின்னர் வைத்திலிங்கம் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது: இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒன்றரை லட்சம் தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தை சேர்ந்த 3 லட்சம் பேரும் இணைந்துள்ளனர். மொத்தம் 4.5 லட்சம் பேர் இந்த மருத்துவமனையில் காப்பீட்டு வசதி பெறுகின்றனர். தினந்தோறும் பல்வேறு பகுதியில் இருந்து நோயாளிகள் வருகிறார்கள். அவர்களுக்கு வேண்டிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறப்பு மருத்துவ வசதியும் செய்யப்பட்டுள்ளது. இஎஸ்ஐ மருத்துவமனை சிறப்பாக செயல்படுவது புதுச்சேரி அரசுக்குத்தான் பெருமை. கடந்த கால நிலைமை மாறி தற்போது 80 சதவீத அளவுக்கு சேவையை உயர்த்தி இருக்கிறார்கள். இதற்காக மருத்துவமனை நிர்வாகத்துக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மருத்துவமனைக்கு ரூ.1 கோடி அளவுக்கு உபகரணங்கள், கருவிகள் தேவைப்படுகிறது. அதை ெபற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன். இங்கு மருத்துவ வசதி இல்லாதபோது வெளியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் அதற்குன்டான தொகை தொழிலாளர்களுக்கு கிடைப்பதில் காலதாமதம் ஆவதாக தெரிவித்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளிடம் பேசி ஓரிரு மாதங்களில் அந்த தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.ஊழியர் பற்றாக்குறையும் உள்ளது. ஆகையால், ஊழியர்கள் நியமனம், கட்டிட வசதி, உபகரணங்கள் உள்ளிட்ட தேவைகளை குறித்து கேட்டுள்ளேன். அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பேன். புதுச்சேரியில் இஎஸ்ஐ மாதிரி மருத்துவமனை அமைப்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது. அதை செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்
படும். இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின்போது, மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணன், இஎஸ்ஐ மண்டல குழு உறுப்பினர் ரத்தினவேலு, மாநில காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர் வினோத் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : hospital ,ESI ,Puducherry ,
× RELATED மருத்துவரின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி