×

`897 பள்ளிகளில் சைல்டு லைன் பேனர்’

புதுச்சேரி, நவ. 13:  புதுச்சேரி ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட நிகழ்ச்சி மேலாளர் செல்வமுருகன் அளித்த பேட்டி: 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதுகாக்க பல்வேறு சட்ட திட்டங்கள் உள்ளன. அதனை நடைமுறைப்படுத்தினாலும், சிறிய மாநிலமான புதுச்சேரியில் நிறைய தவறுகள் நடக்கிறது. எனவே, கண்டிப்புடன் சட்டங்களை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அதே சமயத்தில் சைல்டு லைன் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு அவசியம் தேவை. அப்போதுதான் குழந்தைகள் மீதான வன்முறைகள் குறையும். புதுச்சேரியில் 59 குழந்தை காப்பகங்கள் உள்ளன. அங்கு 18 வயதுக்குட்பட்ட 1,515 பேர் உள்ளனர். அவர்களது பாதுகாப்பு, பராமரிப்பு குறித்து அடிக்கடி ஆய்வு செய்து வருகிறோம்.

குழந்தைகளிடம் தன்னை தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய மனப்பக்குவத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்காக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக 897 பள்ளிகளில் சைல்டு லைன் - 1098 என்ற விழிப்புணர்வு பேனர் வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...