×

7 கைதிகளை விடுவிக்க முக்கிய முடிவு: காவல், சிறை அதிகாரிகளுடன் முதல்வர் அவசர ஆலோசனை

புதுச்சேரி, நவ. 13: புதுச்சேரியில் தொடர் குற்ற சம்பவங்கள் எதிரொலியாக சிறைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் நாராயணசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் ஆயுள் தண்டனை முடித்த கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. புதுவையில் சமீபகாலமாக வெடிகுண்டு கலாச்சாரம் மீண்டும் அதிகரித்துள்ளது. ரவுடிகள் நடுரோட்டில் வெடிகுண்டு வீசி கொல்லப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இதுதவிர வழிப்பறி, கொலை முயற்சி சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
 இதையடுத்து மாநில சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு குறித்து டிஜிபி பாலாஜி வஸ்தவா உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். இதில் ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முதல்வர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் சிறையில் இருந்து ரவுடிகளை ஏவி பணம் பறித்தல், கொலை செய்தல் மற்றும் சிறையில் செல்போன் பயன்பாடு குறித்து முதல்வர் நாராயணசாமி ஆலோசனை மேற்கொண்டார். தலைமை செயலர் அஸ்வனி குமார், சிறைத்துறை ஐஜி பங்கஜ்குமார் ஜா, சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில், சிறையில் ஜாமர் கருவிகளின் தற்போதைய செயல்பாடு, ரவுடிகள் செல்போaன் பயன்பாடு தடுத்தல் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் காலாப் பட்டு சிறையில் 47 ஆயுள் தண்டனை கைதிகளில் 7 பேரின் தண்டனை காலம் முடிவடைந்த நிலையில் அவர்களை விடுவிப்பது தொடர்பாகவும், அவர்களின் நன்னடத்தை குறித்தும் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பது தொடர்பாக வருகிற 18ம்தேதி மீண்டும் ஆலோசனை நடத்தி அன்றைய தினமே நன்னடத்தை விதியில் விடுதலையாகும் ஆயுள் தண்டனை கைதிகளின் பெயரை அறிவிக்க முடிவு செய்யப்பட் டுள்ளது.

Tags : detainees ,prison officials ,
× RELATED பயிற்சி முடித்துள்ள காவலர்கள்...