கரசூரில் சர்வதேச விமான நிலையம்: புதுச்சேரியில் ₹3 ஆயிரம் கோடியில் முதலீடு

புதுச்சேரி, நவ. 13: சிங்கப்பூர்  பயணம் குறித்து கவர்னர் கிரண்பேடி விவரம் தெரியாமல் பேசி வருவதாக கூறிய முதல்வர் நாராயணசாமி கரசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இது குறித்து முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தனிப்பட்ட  பயணமாக நானும் தொழில்துறை அமைச்சர் ஷாஜகான் மற்றும் பிப்டிக் சேர்மன் சிவா  ஆகியோர் கடந்த 6ம் தேதி சிங்கப்பூர் சென்றோம். அதிகாரிகளை அழைத்து  செல்லாமல் நாங்கள் மட்டும் சென்றோம். மெய்ன் ஹர்ட் என்ற கட்டுமான  நிறுவனத்துடன் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். சர்வதேச  தரத்திலான விமான நிலையம் கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை  நடத்தப்பட்டது. அரசு, தனியார் பங்களிப்புடன் கரசூர் பகுதியில் சர்வதேச  விமான நிலையம் கொண்டு வருவதற்கு ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த நிறுவனம்  விஜயவாடாவில் விமான நிலையம் அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டு நடைமுறையில்  இருக்கிறது.  அடுத்தபடியாக சிங்கப்பூர் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் 25 பிரதிநிதிகளிடம் அதிகப்படியாக முதலீடுகளை கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.  குறிப்பாக ஐடி மற்றும் சுற்றுலா வளர்ச்சி திட்டங்களில் முதலீடு செய்ய  விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று காரைக்காலில் ரூ. 1500 கோடியில் கண்ணாடி தொழிற்சாலையும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கவும், புதுச்சேரியில் பெரு வணிக வளாகம்(மால்) கட்டுவதற்கும் நல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். இதில் மிகப்பெரிய நிறுவனமான சர்வனா ஜூரன்  மற்றும் மெயின் ஹர்ட் நிறுவனம் இணைந்து விமான நிலைய உள்கட்டமைப்பு  ேமம்பாட்டில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.  பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.  நியாங்  யாங் என்ற ெதாழில்நுட்ப நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதில்,   மாணவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கவும் ஏற்றுக்  கொண்டுள்ளனர். இந்த தனிப்பட்ட பயணத்தின் நோக்கம், புதுச்சேரியில்  சர்வதேச விமான நிலையம், ஐடி பார்க், தொழில் பூங்காக்கள் கொண்டு வந்து  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது தான். இதேபோன்று சென்னை- புதுச்சேரி- காரைக்கால்- கன்னியாகுமரி வரை அதிவேக கடல்  போக்குவரத்து (சீ-குரூஸ்) துவக்கவும் ஒரு நிறுவனம் முன்வந்துள்ளது. அவர்கள் வரும் 20ம் தேதி  புதுச்சேரி வர உள்ளனர். சிங்கப்பூர் பயணத்தின் போது ரூ. 3 ஆயிரம்  கோடி அளவுக்கு முதலீடு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தேவைப்பட்டால் மீண்டும் சிங்கப்பூர் செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: