நியாய விலைக்கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்

கள்ளக்குறிச்சி, நவ. 13:  தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி  கள்ளக்குறிச்சி கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. டிஎன்சிஎஸ்சிக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். குழுவின் அறிக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும். டிஎன்சிஎஸ்சி குடோனிலிருந்து சரியான எடையிட்டு நியாய விலைக்கடைக்கு பொருட்கள் வழங்க வேண்டும். நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு மருத்துவபடி ரூ.300 வழங்க வேண்டும். ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். தனித்துறையாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலை கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட இணை செயலாளர்கள் ஏழுமலை, அமலா, துணைத்லைவர்கள் வேல்முருகன், பரசுராமன், அமைப்பு செயலாளர் கோவிந்தராஜ் உள்பட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், வெள்ளிமலை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், தியாகதுருகம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நியாய விலைக்கடை பணியாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories:

>