உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் ஆய்வு

பண்ருட்டி, நவ. 13: பண்ருட்டி அருகே அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான முன்னேற்பாடாக பதிவேடு பணிகள் நடந்து வருகின்றன. இங்குள்ள 42 ஊராட்சி மன்றங்களுக்கு ஊராட்சி செயலர்களுக்கான பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஊராட்சி மன்ற தேர்தலின்போது பொதுமக்களின் வாக்கு பதிவிற்கு பின் வாக்குப்பதிவு பெட்டிகளை சீல் வைத்து, அண்ணாகிராமம் கோழிப்பாக்கம் அரசினர் மேனிலைப்பள்ளியில் வைப்பது வழக்கம்.

Advertising
Advertising

தற்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டு பண்ருட்டி அரசினர் மேனிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் பிடிஓ சரவணன், டிஎஸ்பி நாகராசன் ஆகியோர் பண்ருட்டி அரசினர் மேனிலைப்பள்ளியில் குடிநீர், மின்சார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் உள்ளனவா என நேற்று ஆய்வு செய்தனர். இதில் வாக்கு எண்ணிக்கை நடத்த போதுமான இடவசதி உள்ளதாக தெரிய வருகிறது.

Related Stories: