வேகத்தடையில் வெள்ளை அடிக்கும் பணி

திருக்கோவிலூர்,  நவ. 13: விழுப்புரம் மாவட்டம்  திருக்கோவிலூர் பகுதியில் சங்கராபுரம் செல்லும் சாலை கடந்த ஐந்து  வருடத்திற்கு முன் போடப்பட்டது. இந்த சாலையை சந்தப்பேட்டை, தொட்டி, கீரனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த  சாலையில் பள்ளிகள், வளைவு பகுதி அதிகம் உள்ளதால்  விபத்து ஏற்படாமல்  இருக்க ஆங்காங்கே நெடுஞ்சாலை துறை சார்பில் வேகத்தடை அமைக்கப்பட்டு அதில்  வெள்ளை நிற வர்ணம் பூசப்பட்டது.  வேகத்தடையில் வெள்ளை  நிறம்  மறைந்த காரணத்தால் வாகன ஓட்டிகள் கவன குறைவால் விபத்து  ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் விளைவாக தற்போது நெடுஞ்சாலை துறை சார்பாக வேகத்தடையில் வெள்ளை நிற வர்ணம் பூசும் பணி நடக்கிறது.

Related Stories:

>