சாலையில் விழுந்த மணிலா மூட்டையால் உளுந்தூர்பேட்டையில் போக்குவரத்து பாதிப்பு

உளுந்தூர்பேட்டை, நவ. 13: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இருந்து மணிலா மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி மங்கலம்பேட்டையை நோக்கி வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை விழுப்புரத்தை சேர்ந்த குணசேகரன்(45) என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி நேற்று காலை உளுந்தூர்பேட்டை கடைவீதி தனியார் பள்ளி எதிரில் வந்துகொண்டு இருந்த போது, திடீரென லாரியில் மணிலா மூட்டைகள் மேல் கட்டியிருந்த கயிறு அறுந்து மணிலா மூட்டைகள் சாலையில் விழுந்தது. மேலும் இதனை அறியாத டிரைவர் லாரியை ஓட்டிக்கொண்டு சென்ற போது லாரியில் இருந்து மணிலா சாலை முழுவதும் கொட்டிக்கொண்டே சென்றது.

இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் டிரைவரிடம் தெரிவித்து லாரியை நிறுத்தினார்கள். அதற்குள் சாலையில் சிதறிக்கிடந்த மணிலா பயிரை சாலையில் சென்ற ஏராளமானவர்கள் அள்ளிச் சென்றனர். இதனால் விழுப்புரம்-உளுந்தூர்பேட்டை சாலையில் காலை நேரத்தில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் சாலையில் கிடந்த மணிலாவை கூட்டி மூட்டை பிடித்து டிரைவர் எஞ்சியுள்ளதை எடுத்து சென்றார். இந்த சம்பவத்தால் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான மணிலா சாலையில் கொட்டி சேதமானது. லாரியில் ஏற்றிச் சென்ற மணிலா சாலையில் கொட்டி பொதுமக்கள் அள்ளிச் சென்ற சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: