27 கிலோ பிளாஸ்டிக் பை பறிமுதல்

இடைப்பாடி, நவ.13: இடைப்பாடி பகுதியில் நடத்திய சோதனையில் 27 கிலோ பிளாஸ்டிக் பை பறிமுதல் செய்யப்பட்டது. இடைப்பாடி பகுதியில் விதி மீறி தடை செய்யப்பட்ட பிளாடிக் பை மற்றும் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதன்பேரில், சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு பணி முடுக்கி விடப்பட்டது. பஸ் நிலையம், கடைவீதி, பூலாம்பட்டி ரோடு, பவானி ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் சென்னகிருஷ்ணன் தலைமையில் சுகாதார அலுவலர் செந்தில்குமார், ஆய்வாளர்கள் தங்கவேல், ஜான் விக்டர், முருகன் உள்ளிட்டோர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், விதி மீறி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 27 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 7 கடைகளுக்கு தலா ₹500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து விதி மீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணி பைகளை பயன்படுத்துமாறும் நகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தினார்.

Related Stories: