யாதவகுல மகளிர் அமைப்பின் சார்பில் நிறைவாழ்வு முதியோர் இல்லத்திற்கு உதவி

சேலம், நவ.13: சேலம் யாதவ குலப்பெண்கள் அமைப்பான “யாதவா லேடிஸ் விங்“ என்ற அமைப்பினர் நிறைவாழ்வு முதியோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். ஐந்து ரோடு அண்ணாபுரம் பகுதி மற்றும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியிலும் நிறைவாழ்வு முதியோர் இல்லம் செயல்பட்டுவருகிறது. இங்கு, 30க்கும் மேற்பட்ட முதியோர்களை வைத்து பராமரித்து வருகிறார்கள். செவ்வாய்ப்பேட்டை பகுதியில் வசிக்கும் யாதவாகுல குடும்பத்தலைவிகள் ஒன்றிணைந்து பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்கள். யாதவகுல மகளிர்அமைப்பின் 7வது ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழா செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள மண்டபத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் நிறைவாழ்வு முதியோர் இல்லத்திற்கு ₹30 ஆயிரம் மதிப்பிலான மெத்தைகள் வழங்கினர். மேலும், அன்பாலயம் குழந்தைகள் காப்பகம், லைஃப் டிரஸ்ட், போதிமரம், சுபம் அறக்கட்டளை போன்ற அமைப்புகளுக்கு வீல்சேர், அரிசி, மளிகைப்பொருட்கள், எழுதுபொருட்கள் மற்றும் எழைப்பெண்ணிற்கான கல்வி உதவித்தொகை போன்றவைகளும் வழங்கினர். விழாவில் அமைப்பின் செயலாளர் சுபாஷினி,  பாலாஜி, சிறப்பு விருந்தினர்கள் கண்ணன், சிவகுமார், வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக்கொண்ட நிறைவாழ்வு முதியோர் இல்ல நிர்வாகிகள் அண்ணாதுரை மற்றும் அருள்மலர் ஆகியோர் யாதவா மகளிர் அமைப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories:

>