மணியனூர் அரசு பள்ளியில் இலவச நோட்டு புத்தகம்

சேலம், நவ.13: சேலம் மணியனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் லயன்ஸ் கிளப் சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம், பரிசுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. மிட்டாய் சீனிவாசன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து, பள்ளியில் படிக்கும் 450 மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார். 10ம் வகுப்பில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பூர் முருகேசன், ஜெயராமன், முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் கார்த்திக், ஓபிசி அணி நிர்வாகிகள் வெங்கடேஷ், கார்த்திக், சண்முகம், கௌதமன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கோவிந்தன், மேச்சேரி முருகன், ராஜீவ்காந்தி, சீனிவாசன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி புஷ்பா பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: