2 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 1 கிலோ அரிசி திட்டம் துவக்கம்

ஓமலூர், நவ.13: ஓமலூரில் 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி துவக்கி வைத்தார். சேலம் மாவட்டம் ஓமலூரில் பசுமை தாயகம் சார்பில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பசுமை தாயகம் மாவட்ட தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் முருகன், ராதா ஜூவல்லர்ஸ் சதாசிவம், நகர செயலாளர் சாய்சுஜன் முன்னிலை வகித்தனர். பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்துகொண்டு பொதுமக்களிடம் 2 கிலோ குப்பையை பெற்றுக்கொண்டு 1 கிலோ அரிசியை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணையன், பாமக மாவட்ட தலைவர் டாக்டர் மாணிக்கம், பசுமை தாயக மாநில நிர்வாகி சத்ரியசேகர், மாவட்ட செயலாளர் ராஜசேகர், தேர்தல் பணிக்குழு சதாசிவம், மாநில இளைஞரணி துணைத்தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஒன்றிய செயலாளர்கள் குமார், ரவி, சக்திவேல், மாவட்ட துணை செயலாளர் பழனிசாமி, தொகுதி அமைப்பு செயலாளர் குமார், சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>