×

காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

பண்ருட்டி, நவ. 13: பண்ருட்டி அருகே அண்ணா கிராமம் வட்டார காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வட்டார தலைவர் பிரேமாகேசவன் தலைமையில் நடந்தது. மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மங்கவரத்தாள், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் தர், முன்னாள் தலைவர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில பொதுகுழு உறுப்பினர் வேலுமணி கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து போட்டியிட்டு வெற்றி பெறவைப்பது, பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையத்தை சேர்ந்த சத்யகுமார்- தனம் ஆகியோரின் 5வயது குழந்தை பவன்சங்கருக்கு தடுப்பூசி போட்டதில் பாதிப்படைந்து பெங்களூரில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு காரணமான பண்ருட்டி தட்டாஞ்சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். விரைவில் அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து பள்ளியை கண்டித்து போராட்டம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் சங்கர், வேல்முருகன், முத்துவள்ளி, செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Congressional Executive Committee Meeting ,
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு