×

ேரஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

தர்மபுரி, நவ.13:  தர்மபுரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர் சங்கம் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். வட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். நிர்வாகிகள் குமார், சுப்பிரமணி, குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், அரசு நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். பணி வரன்முறை ஒழுங்குபடுத்த வேண்டும்.

நியாயவிலைக்கடைக்கு என்று தனித்துறை அமைக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், தனசேகர் ஆகியோர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் பகுதி மற்றும் முழுநேர நியாயவிலைக்கடைகள் 1007 உள்ளன. 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டம் நடத்துவோம் என்றனர். இதில், வட்ட செயலாளர் முருகன், ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் தனசேகரன், மாநில துணைத் தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் தோன் ஜோசப் நன்றி கூறினார்.

Tags : Ration shop workers ,
× RELATED பெண் பணியாளர்களுக்கு ரேஷன் கடைகளில் கழிவறை வசதி பணியாளர் சங்கம் கோரிக்கை