×

பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

பாப்பிரெட்டிப்பட்டி, நவ.13: பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் கழிவுநீர் தேங்கி கிடக்கும் நிலையில், தொற்று ேநாய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், தர்மபுரி, அரூர், வேலூர், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், பஸ் ஸ்டாண்டில் சாக்கடை கால்வாய்களை முறையாக தூர் வாரி பராமரிக்காததால் கழிவுநீர் சீராக வழிந்தோட வசதியின்றி நாள் கணக்கில் தேங்கிக் கிடக்கிறது. இதனால், கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

மேலும், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடும் துர்நாற்றத்தால் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள் மூக்கை பிடித்தப்படி செல்ல ேவண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சாக்கடை கால்வாய்களை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டுமென பயணிகள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus stand ,Papyrepatti ,
× RELATED குளிர்காலம் தொடங்கியுள்ளதால் நோய் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம்