×

அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் கலையரங்கம் அமைத்துத் தரவேண்டும்: நாடக கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தல்

தர்மபுரி, நவ.13: அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் கலையரங்கம் அமைத்துத் தரவேண்டும் என தர்மபுரியில் நடந்த தமிழ்நாடு நாடகம், நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க, தர்மபுரி மாவட்ட கிளை சார்பில், முதல் மாநாடு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், பெரியார் மன்றத்தில் நடந்தது. ஆலோசனை கூட்டத்திற்கு, மாநில துணை தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மாநில கவுரவ ஆலோசகர் சிங்காரவேலன் கலந்து கொண்டு பேசினார். மாநில இணை செயலாளர் முருகசாமி, மாநில அமைப்பு செயலாளர் சாரதி, மாநில நிர்வாகிகள் செந்தில், முனியப்பன், சின்னசாமி, வேலவன், குணசேகரன், அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ஓய்வூதியம் பெறுவதற்கு வயது வரம்பு ஆண்களுக்கு 50 வயதும், பெண்களுக்கு 40 வயதும் உயர்த்த வேண்டும். ஓய்வூதியம் ₹5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு வீடு, காலி மனை பட்டா வழங்க வேண்டும். கலைஞர்களுக்கு ஆடை அணிகலன்கள் வாங்குவதற்கு நிதி உதவி வழங்க வேண்டும். இசை கருவிகள் வாங்குவதற்கு மானியம் வழங்க வழங்க வேண்டும். கலைஞருக்கு இயற்கை மரணம் மற்றும் விபத்துக்கு நிதி வழங்க வேண்டும். அரசு ஊழியர்களை போன்று ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு விருதுகள் ஆண்டுக்கு 25 வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் கலையரங்கம் அமைத்துத் தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Art Gallery ,Panchayat Unions ,
× RELATED மாநிலம் முழுவதும் ஊராட்சி...