×

புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும்: ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கூட்டத்தில் தீர்மானம்

தர்மபுரி, நவ.13: புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டுமென ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தர்மபுரி மாவட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்கத்தின் சிறப்பு தலைவர் ஓம் சக்தி டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் சக்திவேல் தலைமை வகித்தார். ஜானகிராமன் வரவேற்றார். ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் குமார், பிரபு, நந்தகுமார், தனசேகர், முருகவேல், லட்சுமணன், சிவசக்தி, பத்மநாபன், புஷ்பராஜ், கண்மணி, சுபா, புருஷோத்தமன்,
ராமகிருஷ்ணன் மற்றும் பயிற்சி பள்ளி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், படிக்காத இளைஞர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணி வில்லை பேஜ் எடுத்து தர கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மணிவண்ணன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED விவசாயிகளுக்கு ஆதரவாக கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்