×

பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம்

திருமங்கலம்,  நவ.13: திருமங்கலம்-குற்றாலம் தேசிய நெடுஞ்சாலையில் முறிந்து விழும் நிலையில் உள்ள பட்டுப்போன மரங்களால் ஆபத்து காத்திருப்பதாக வாகன ஓட்டிகள் புகார்  தெரிவித்துள்ளனர்.திருமங்கலத்திலிருந்து ராஜபாளையம், குற்றாலம் வழியாக  கொல்லத்திற்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இருவழிபாதையான இந்த சாலையில்  திருமங்கலம்-விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் பட்டுப்போன மரங்கள்  அதிகளவில் காணப்படுகின்றன. சமீபத்தில் பெய்த மழையால் இந்த மரங்களில் சில கீழே  விழுந்துவிட்டன. இருப்பினும் இன்னும் நான்கிற்கும் மேற்பட்ட பட்டுப்போன மரங்கள்  வரிசையாக நின்று வருகின்றன. நிமிடத்திற்கு இரண்டு வாகனங்கள் கடந்து செல்லும் தேசிய  நெடுஞ்சாலையில் எந்த நேரத்திலும் பட்டுப்போன மரங்கள் முறிந்து கீழே விழும் அபாயம்  இருப்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர்.  இதே ரோட்டில் கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மரம் முறிந்து அரசு பஸ் மீது விழுந்ததில் ஒரு பயணி  உயிரிழந்தார். 5க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். எனவே தேசிய  நெடுஞ்சாலைத்துறையினர் இந்த சாலையில் காணப்படும் பட்டுப்போன மரங்களை வெட்டி  அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

Tags : accident ,
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...