அரசு ஊழியர்கள் பிரசாரம்

மதுரை, நவ. 13: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். இளைஞர்கள் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 56ஐ ரத்து செய்ய வேண்டும். அரசு துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. சத்துணவு, அங்கன்வாடி, நூலகர், கிராம உதவியாளர் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 4.34 லட்சம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகத்தில் ‘மக்கள் ஊழியர் சந்திப்பு இயக்க’ பிரசாரம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ராமநாதபுரத்தில் பிரசார பயணம் துவங்கியது. இதனைத்தொடர்ந்து நேற்று மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அரசு அச்சகம் முன்பு பிரசார பயணம் துவங்கியது. பிரசார பயணத்தை மாநில தலைவர் அன்பரசு துவக்கி வைத்தார். மாநில செயலாளர் செல்வம், மாவட்ட தலைவர் ஜெயராஜராஜேஸ்வரன், செயலாளர் நீதிராஜா உள்ளிட்டோர் கலந்து ெகாண்டனர்.

பொதுப்பணித்துறை அலுவலகம், அரசு மருத்துவமனை, காந்தி மியூசியம், நெடுஞ்சாலைத்துறை, கிழக்கு மேற்கு யூனியன் அலுவலகங்கள், வணிக வரி அலுலவகம் ஆகியவை உள்ள பகுதிகளில் கோரிக்கை தொடர்பாக அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் விளக்கி பிரசாரம் செய்தனர். இன்று மதுரை மாவட்டம், திரும்ங்கலம், உசிலம்பட்டி, மேலூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் நடக்கிறது.

Related Stories: