நாளை முதல் திமுக விண்ணப்பம் வாங்குகிறது

மதுரை, நவ. 13: மதுரை மாநகராட்சி தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவோரிடம் நாளை முதல் விண்ணப்பம் வாங்கப்படுகிறது. மதுரை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் கோ.தளபதி வெளியிட்டுள்ள அறிக்கை: மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் உரிய விண்ணப்ப படிவத்தை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் பெற்று, போட்டியிடும் பொறுப்பு மற்றும் தம்மை பற்றிய விவரங்களை அதில் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விண்ணப்பங்களை நவம்பர் 14ம் தேதி (நாளை) முதல் 20ம் தேதி வரை வழங்கலாம். மேயர் பொறுப்புக்கு போட்டியிட விரும்புவோர் ரூ.50 ஆயிரமும், கவுன்சிலர் பொறுப்புக்கு போட்டியிட விரும்புவோர் ரூ.10 ஆயிரமும் விண்ணப்பத்துடன் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இந்த கட்டணத்தில் பாதி தொகை செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்–்ட விண்ணப்பத்தை உரிய கட்டணத்துடன் மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் மாநகர் மாவட்ட பொறுப்பாளரிடம் வழங்கி ரசீது பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>