×

பயனாளிகளுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கல்

இலுப்பூர், நவ. 13: இலுப்பூர் அருகே உள்ள இருந்திராபட்டியில் நடைபெற மக்கள் தொடர்பு முகாமில் 7 பயனாளிகளுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டது.இலுப்பூர் அருகே உள்ள இருந்திராப்பட்டியில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மூலமாக சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு இலுப்பூர் வட்ட வழங்கல் அலுவலர் பழனிச்சாமி தலைமை வகித்தார். இதில் பொது மக்களிடம் இருந்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. இதில் 7 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டது. வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் முருகன், ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED ரேஷன் அட்டை மனுக்களை விரைவாக...