×

மாநில அளவிலான டேபிள் டென்னீஸ் போட்டிக்கு அரசு பள்ளி மாணவிகள் தேர்வு

புதுக்கோட்டை, நவ.13: புதுக்கோட்டை மாவட்டம் அரையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான டேபிள் டென்னீஸ் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.ஆலங்குடி அடுத்த அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தேன்மொழி, சரண்யா. இவர்கள் புதுக்கோட்டையில் நடைபெற்ற மண்டல அளவிலான டேபிள் டென்னீஸ் போட்டிக்கு தகுதி பெற்று பங்கேற்றனர். இதில் தேன்மொழி ஒற்றையர் பிரிவிலும், தேன்மொழி, சரண்யா ஆகிய இருவரும் இரட்டையர் பிரிவுகளில் வெற்றிபெற்று மாநில அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.

Tags : State School Students ,
× RELATED அரசுப்பள்ளி மாணவர்களுக்கான...