×

மாங்கோட்டை ஊராட்சியில் கொசு ஒழிப்பு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

கறம்பக்குடி, நவ. 13: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் மாங்கோட்டை ஊராட்சியில் நிர்வாகம் சார்பாக  மாங்கோட்டை, மெலப்பட்டி, தெற்குப் பட்டி, மே ட்டுப்பட்டி, ஆதி திராவிடர் காலனி , குழவாய்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனைத்து இடங்களில் முழுவதும் கொசுக்களை ஒழிக்கும் வகையில் கோயில் உள்ளிட்ட பல இடங்களில் கொசு ஒழிப்பு மருந்து ஊராட்சி தூய்மை காவலர்கள் மூலம் அடிக்கப்பட்டது. இந்த கொசு மருந்து அடித்ததை கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் ஆய்வு செய்தார்.இதில் பொது மக்கள் பார்வை இட்டனர் இதற்கான ஏற்பாடுகளை மாங்கோட்டை ஊராட்சி செயலர் முருகன் செய்து இருந்தார்.அனைத்து கிராமங்களுக்கும் சென்று கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டு ஆய்வு செய்தார்

Tags : Mankottai ,
× RELATED கீவளூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பூமி பூஜை