×

கிடுகிடுவென உயரும் நீர்மட்டம் பிளவக்கல் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றம்

வத்திராயிருப்பு, நவ. 13: வத்திராயிருப்பு அருகே, பிளவக்கல் பெரியாறு அணையில் கிடுகிடுவென நீர்மட்டம் உயர்ந்து, அபாய கட்டத்தை எட்டியதையடுத்து, அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் என்ற இடத்தில் பெரியாறு, கோவிலாறு அணைகள் உள்ளன. பெரியாறு அணையின் மொத்த உயரம் 47.56 அடி. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் அணைக்கு நீர்வரத்து இருக்கும். இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்வதால், அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணை நீர்மட்டம் 45.61 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 73.92 கனஅடியாக உள்ளது. அபாய கட்டத்தை எட்டியதால் அணையின் பாதுகாப்பு நலன் கருதி அணையிலிருந்து வினாடிக்கு 130 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. எனவே, பாசனத்திற்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவிலாறு அணையின் மொத்த உயரம் 42.64 அடி. அணையின் நீர்மட்டம் 29.04 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 46.72 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து நீர் வௌியேற்றம் இல்லை.

Tags : rivers ,
× RELATED நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கைகள் தினவிழா