×

பூமலை சஞ்சீவிராயர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம்

பாடாலூர், நவ 13: ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் உள்ள பூமலை சஞ்சீவிராயர் மலைக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி கிரிவல விழா நடந்து வருகிறது. இந்த மாதம் 239வது பவுர்ணமி கிரிவல விழா​ நடந்தது. முன்னதாக மலை அடிவாரத்தில் பக்தர்கள் ஒன்று கூடி மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். பின்னர் வழித்துணை ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கிரிவலத்தில் பாடாலூர்,​ திருவிளக்குறிச்சி, தெரணி, காரை, விஜயகோலபுரம், புதுக்குறிச்சி, நாரணமங்கலம், மருதடி, இரூர், சீதேவிமங்கலம், கூத்தனூர், நாட்டார்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

தண்டாயுதபாணி கோயிலில் கிரிவலம்: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் தண்டாயுதபாணி கோயில் மலை மீது அமைந்துள்ளது. இந்த கோயிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது. முன்னதாக கிரிவலத்தை முன்னிட்டு மலைமீதுள்ள தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கிரிவலம் நடந்தது. இதையடுத்து மலைக்கோவிலை சுற்றி வெள்ளி தேர் இழுக்கப்பட்டது. கிரிவலத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


Tags : Purnami Girivalam ,Sanjivarai Temple ,
× RELATED திருவண்ணாமலையில் தொடர்ந்து 3வது...