கொடைக்கானல் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

கொடைக்கானல், நவ. 13: கொடைக்கானல் நகராட்சியின் புதிய கமிஷனராக நாராயணன் பொறுப்பேற்று கொண்டார். கொடைக்கானல் நகராட்சியில் கமிஷனராக இருந்தவர் முருகேசன். இவர் கோயம்புத்தூர் டிஎன்ஐயுஎஸ் நிறுவனத்தின் துணை இயக்குனராக பணி மாற்றம் செய்யப்பட்டார் .இதையடுத்து பழநி நகராட்சி கமிஷனராக இருந்த நாராயணன் கொடைக்கானல் நகராட்சி புதிய கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் இதற்கான அறிவிப்பை தமிழக நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆணையாளர் வெளியிட்டார். இந்நிலையில் நேற்று கொடைக்கானல் நகராட்சியின் புதிய கமிஷனராக நாராயணன் பொறுப்பேற்றார். அவருக்கு முந்தைய கமிஷனர் முருகேசன் பொறுப்புகளை வழங்கினார்.

Related Stories:

>