செம்பட்டி அருகே 9 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல், நவ. 13: செம்பட்டி அருகே டூவீலரில் கடத்தி வந்த 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர். செம்பட்டி பகுதியில் கஞ்சா, மது விற்பனை, சூதாட்டம் உள்ளிட்ட சமூகவிரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க செம்பட்டி போலீசார் திவீர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் செம்பட்டி சப்இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் உள்ளிட்ட போலீசார் சித்தையன்கோட்டை அடுத்த நரசிங்கபுரம் கண்மாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் அவ்வழியே ஒரு மூடையுடன் டூவீலரில் வந்த 3 பேரை பிடித்து சோதனை நடத்தினர். மூடையில் 9 கிலோ கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் பட்டிவீரன்பட்டி நெல்லூரை சேர்ந்த காசிராஜன் (38), முத்துராமன் (48), செம்பட்டி சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த செல்வா (17, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து, கஞ்சா- டூவீலரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து காசிராஜன், முத்துராமனை ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தில் திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். சிறுவன் செல்வாவை திண்டுக்கல் இளைஞர் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தினர்.

Related Stories:

>