×

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை அழிக்க புதிய திட்டம்

திருக்காட்டுப்பள்ளி, நவ. 13: பூதலூர் வட்டாரத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை முற்றிலும் அழிக்க தமிழக அரசு புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்று வேளாண்மை உதவி இயக்குனர்(பொ) சரசு தெரிவித்துள்ளார்.பூதலூர் வட்டாரத்தில் பூதலூர் கிராமத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை முறையில் ஒட்டுமொத்த பரப்பில் பயிர் பாதுகாப்பு மருந்து தெளித்தல் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் சரசு ஆய்வு செய்தார். இதைதொடர்ந்து அவர் கூறியதாவது: பூதலூர் வட்டாரத்தில் செங்கிப்பட்டி, ஆச்சாம்பட்டி, புதுப்பட்டி, பாலையப்பட்டி, வீரமரசன்பேட்டை மற்றும் செல்லப்பன்பேட்டை ஆகிய கிராமங்களில் 66 ஹெக்டேரில் மக்காச்சோள சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் 14 ஹெக்டர் பரப்பில் பயிர் இளம் பருவத்தில் உள்ளது.கடந்தாண்டில் இருந்து மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் காணப்படுகிறது. குறிப்பாக இளம் பருவத்தில் படைப்புழு தாக்குதல் அதிகமாக தென்பட்டதால் தமிழக அரசு புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. படைப்புழுவை முற்றிலும் அழிக்கும் விதமாக ஒட்டுமொத்தமாக பூச்சிக்கொல்லி தெளிப்பு என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.படைப்புழு மேலாண்மை திட்டத்தின்கீழ் ரூ.3,500 மதிப்பில் மருந்தும், தெளிப்பு கூலியாக ரூ.1000மும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

Tags : maize attack ,
× RELATED மக்காச்சோள பயிரில் படைப்புழு...