கத்தியை காட்டி மிரட்டி தம்பதியிடம் நகை பறிக்க முயற்சி

திருக்காட்டுப்பள்ளி, நவ 13: திருக்காட்டுப்பள்ளி அருகே கத்தியை காட்டி மிரட்டி தம்பதியிடம் நகை பறிக்க முயன்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருக்காட்டுப்பள்ளி அருகே முல்லைக்குடி பழைய ஆற்காடு மேலத்தெரு வீரமணி மகன் செல்லத்துரை (33). இவர் கடந்த 10ம் தேதி மனைவி காயத்திரியுடன் திருக்காட்டுப்பள்ளி அடுத்துள்ள திருச்சினம்பூண்டியில் நடந்த உறவினர் தேவையில் கலந்து கொள்ள சென்றார். அன்று மாலை வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்தார். பூண்டி மாதா கோயில் ஆர்ச் அருகே வந்தபோது மர்மநபர்கள் கத்தியை காட்டி நகையை பறிக்க முயன்றனர். இதை தடுக்க முயன்ற செல்லத்துரையை கத்தியால் குத்தினர்.இதில் படுகாயமடைந்த செல்லத்துரை, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் செல்லத்துரை புகார் செய்தார். திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>