பாபநாசம் உழவர் சந்தை அருகேடாஸ்மாக் கடை திறந்தால் போராட்டம்

பாபநாசம், நவ. 13: பாபநாசம் உழவர் சந்தை அருகே டாஸ்மாக் கடை திறக்க முயன்றால் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக வடக்கு மாவட்ட பொது உறுப்பினர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.பாபநாசத்தில் திமுக வடக்கு மாவட்ட பொது உறுப்பினர் கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், திருவிடைமருதூர் எம்எல்ஏ கோவி.செழியன், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன், மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் பாபநாசத்தில் குடியிருப்பு பகுதி நிறைந்த உழவர் சந்தை அருகில் டாஸ்மாக் கடை திறக்க முயற்சிப்பதை கண்டிப்பது. மீறி திறந்தால் மக்கள் நலன் சார்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது. யூரியா தட்டுப்பாடு நிலவுவதால் உடன் நிலைமையை சரி செய்ய நடவடிக்கை எடுக்காத வேளாண் அமைச்சரை கண்டிப்பது. பாபநாசம்- சாலியமங்கலம் சாலையில் கல்லூரி, மேல்நிலைப்பள்ளி உள்ளதால் இந்த சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணை செயலாளர் அய்யாராசு, மாவட்ட பொருளாளர் ஷேக் தாவூது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>