பாபநாசம் பகுதியில் பாபநாசம் பகுதியில்

பாபநாசம், நவ. 13: பாபநாசம் பகுதியில் ஆதார் கார்டுக்கு 45 கிலோ யூரியா உரம் தான் வழங்கப்படும் என்று ஆதனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கூறியதால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே ஆதனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. கபிஸ்தலம் சுற்றுவட்டார பகுதிகளில் நடவுப்பணி நடந்து வரும் நிலையில் யூரியா வாங்குவதற்காக வங்கியின் முன் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டனர். ஆனால் விவசாயிக்கு ஆதார் கார்டுக்கு 45 கிலோ யூரியா உரம் தான் தரப்படும் என கூறியதால் விவசாயிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

Advertising
Advertising

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், ஒரு விவசாயிக்கு 4 ஏக்கர் நிலம் இருந்தால் 5 யூரியா மூட்டை தேவைப்படும். ஆனால் ஒரு மூட்டை தான் தரப்படும் என்கின்றனர். வேளாண்துறை அமைச்சர், யூரியா தட்டுப்பாடு இல்லை என்கிறார். ஆனால் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு நிலவுகிறது. இங்கு யூரியா மூட்டை ரூ.270 என்றால் வெளியில் ரூ.350க்கு கிடைக்கிறது. ஒரு லோடுக்கு 200 மூட்டை தான் வருகிறது. இது எப்படி போதுமானதாக இருக்கும் என்கின்றனர். மாவட்டத்தில் பல இடங்களில் எங்களுக்கு தேவையான டிஏபி, யூரியா உரம் தேவையென்றால் மற்ற உரங்களையும் எங்கள் தலையில் கட்டுகின்றனர். விதை நெல்லுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது என்றனர்.

Related Stories: