×

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு

கிருஷ்ணகிரி, நவ.13: கிருஷ்ணகிரியில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 2019-2020ம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் நேற்று முன்தினம் காலை நகராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, வருவாய் மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டமும் இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் மாவட்டத்திற்குள் 15 பேருக்கும், மாவட்டம் விட்டு மாவட்டம் 3 பேருக்கும் என 18 தலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

தொடர்ச்சியாக அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் 21 பேருக்கு பதவி உயர்வுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த ஆணைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் வழங்கினார். இந்நிலையில் நேற்று அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் வருவாய் மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான  கலந்தாய்வு நடைபெற்றது. மாலை அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடந்தது.

இன்று (13ம் தேதி) காலை  அரசு, நகராட்சி மற்றும் மேல்நிலைப்பள்ளி முதுகலை, தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாறுதலுக்கான கலந்தாய்வும், நாளை (14ம் தேதி) அரசு, நகராட்சி மற்றும் மேல்நிலைப்பள்ளி முதுகலை, தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான கலந்தாய்வும் நடக்கிறது.
15ம் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கு வருவாய் மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டமும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக உடற்கல்வி இயக்குனர் நிலை 2 பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடக்கிறது. 16ம் தேதி தையல் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு நடக்கிறது.

Tags : government school headmasters ,
× RELATED ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 3 அரசு பள்ளி...