வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க கோரி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பேரணி

திருவாரூர், நவ. 13: வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க கோரி திருவாரூரில் நேற்று சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பேரணிநடத்தினர்.வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வு ஊதியம் மாதம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியாக ஓய்வு பெறும் நாளில் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ. 5 லட்சமும், சமையலர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்கிட வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மாநிலத்தை உயர்த்தி வழங்கிடவேண்டும் என்பது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சார்பில் பேரணிநடைபெற்றது.

இதனையொட்டி திருவாரூர் கீழவீதியிலிருந்து மாவட்ட தலைவர் குமார் தலைமையில் புறப்பட்ட பேரணி பனகல் சாலை,பழைய பேரூந்து நிலையம் வழியாக ரயில் நிலையத்தை அடைந்து முடிவுற்றது. இதில் மாவட்ட செயலாளர் ராஜசேகரன் மற்றும் அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர்கள் சவுந்திரராஜன், சண்முகம், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், மாவட்ட தலைவர் ராஜமானிக்கம், பொருளாளர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : rally ,Nutrition Employees Union ,
× RELATED காலமுறை ஊதியம் கேட்டு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பேரணி