மன்னார்குடி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்

மன்னார்குடி, நவ. 13:
ஐப்பசி பவுர்ணமியையொட்டி மன்னார்குடி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் அனைத்து ஆலயங்களிலும், குறிப்பாக சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற சிவத்தலமான காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது.இதனையொட்டி ஏகாம்பரேஸ்வரின் சிவலிங்க திருமேனியை காய்கறிகள் மற்றும் அன்னத்தை கொண்டு அலங்கரித்திருந்தனர். தொடர்ந்து விசேஷ தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர் அன்னம் நீரில் கரைக்கப் பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Mannargudi Ekambareshwar Temple ,
× RELATED கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் ஏகாம்பர ஈஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்