×

மன்னார்குடி நகரத்தில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்

மன்னார்குடி, நவ.13: மன்னார்குடி நகரத்தில் பல்வேறு பகுதிகளில் வளர்க்க படும் மாடுகள் வளர் க்க படுகிறது. இந்த மாடுகள் உரிய முறையில் அதன் உரிமையாளர்களால் வளர்க்கப்படாததால் பேரூந்து நிலையம், முக்கிய கடைவீதிகள், பிரதான சாலைகள், பள்ளி, கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை போன்ற பகுதி களில் பகல் மற்றும் இரவு வேளைகளில் சுகந்திரமாக சுற்றி திரிகின்றன. காலை முதல் இரவு வரை சுற்றி திரியும் மாடுகள் இரவு நேரங்களில் பிரதான சாலைகளில் படுத்து விடுகின்றன. இதனால் இரவு நேரங்களில் வாக னங்களில் செல்பவர்கள் கால்நடைகள் மீது மோதிவிடுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.எனவே நகரத்தில் சுற்றித்திரியும் மாடுகளை நகராட்சி நிர்வாகம் பிடித்து பட்டியில் அடைத்து வைத்து அதன் உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். என வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Livestock accident ,Mannargudi ,city ,
× RELATED நீடாமங்கலம்-மன்னார்குடி சாலை சீரமைக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு