×

தென்னை நோய் தடுக்கும் வழிமுறை

சின்னமனூர், நவ.13: சின்னமனூரில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய 4ம் ஆண்டு  மாணவிகள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் வாயிலாக பயிற்சி பெற்று வருகின்றனர்.   குச்சனூரில் தென்னையில் வருகின்ற நோய்களை தடுக்கும் விதமாக நுண்ணூட்டச்சத்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.    தென்னையில் பூச்சிகளால் கேரளா வாடல் நோய், செவட்ட நோய், பழுப்பு நோய்கள் ஏற்படுகின்றன. நுண்ணூட்ட சத்து அளிப்பதால் குரும்பை கொட்டுதல், சொறிகாய்கள், ஒல்லிக்காய்கள், காலிக்காய்கள் ஏற்படுவது தடுக்கப்படும். வேர்ப் பூச்சிகளையும் வளரவிடாமல் கட்டுப்படுத்தும். காய்களின் எண்ணிக்கையும் அதிகமாக கொடுக்கும் என மாணவிகள் தெரிவித்தனர். மேலும் விவசாயிகளின் கருத்துகளையும் மாணவிகள் கேட்டறிந்தனர்.

Tags :
× RELATED கஞ்சாவுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது