×

கமுதியில் கழிப்பிடம் அருகே மக்கள் தண்ணீர் பிடிக்கும் அவலம்

கமுதி, நவ.13: கமுதி வெள்ளையாபுரத்தில், பொதுக்கழிப்பிடத்தின் அருகே வரும் தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தும் அவலம் உள்ளது. கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி வெள்ளையாபுரம் ஆகும். கமுதி-சாயல்குடி சாலையில் இப்பகுதி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்ட தண்ணீர் குழாய் நீண்ட நாட்களாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனை சரி செய்ய இங்குள்ள மக்கள் பல முறை கோரிக்கை வைத்தும், எந்த பயனும் இல்லை. எனவே அனைவரும் சாலையோரத்தில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே உள்ள குழாயில் தினமும் வீட்டு பயன்பாட்டிற்காக தண்ணீர் எடுத்து செல்கின்றனர். மேலும், இவர்கள் தண்ணீர் பிடிக்கும் குழாய் அருகே செப்டிக்டேங் இருக்கிறது. இது ஆழமாக இல்லாமல் உள்ளது. அடிக்கடி பழுது பார்க்காததால் அவ்வப்போது நிரம்பி அருகே குளம் போல் தேங்கி விடுகிறது. இதனால் இப்பகுதியில், கொடிய நோய்களை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. இதுபற்றி சுகாதாரத் துறையினரும் கண்டுகொள்ளவில்லை. பேரூராட்சி நிர்வாகமும் கவனிக்க வில்லை என்று இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் இதற்கு மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Kamuthi ,
× RELATED முத்தையாபுரத்தில் பேருந்து கண்டக்டரை தாக்கிய இருவர் கைது