×

வாட்ஸ்-அப் மூலம் 2,000 புகார் பதிவு

திருப்பூர், நவ. 13:  திருப்பூர், மாவட்டத்தில் இதுவரை வாட்ஸ்-அப் மூலம் 2,000 புகார்களை பொதுமக்கள் தெரிவித்தாக கலெக்டர் தெரிவித்தார்.  திருப்பூர், மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது: திருப்பூர், மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை கலெக்டர் அலுவலகத்தில் தினசரி மனுக்களாகவும் மற்றும் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் அன்றும், நேரடியாக மனு அளித்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அலைபேசி மூலம் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கும் வகையில் 9700041114 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் தங்களது கோரிக்கையினை குறுந்தகவலாக தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளுக்காக நாள்தோறும் புகார் அளித்து வருகின்றனர். இதில் தினமும் 70 முதல் 80 புகார்கள் வருகின்றன. ட்விட்டரில் புகார்கள் வருகின்றன. தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலைப்பணி, ஓய்வூதியம், இலவச வீட்டு மனைப்பட்டா உட்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக புகார்கள் வருகின்றன. இலவச வீட்டுமனை விவகாரத்தில் அதன் உண்மைத்தன்மை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை 2,000 புகார்கள் வாட்ஸ்- அப்பில் வந்துள்ளது என்றார்.

Tags :
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...