×

250 கிலோ அன்னத்தால் சிவனுக்கு அன்னாபிஷேகம்

ஈரோடு, நவ.13:  ஈரோட்டில் பிரசித்தி பெற்ற கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் மற்றும் மகிமாலீஸ்வரர் கோயில்களில் 250 கிலோ அன்னத்தால் சிவனுக்கு நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. உலகில் உள்ள உயிரினங்கள் பசி, பிணியின்றி நலமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உணவை படைத்த இறைவனுக்கே உணவை படைக்கும் விதமாக ஆண்டுதோறும் தமிழ் மாதம் ஐப்பசியில் வரும் பவுர்ணமியன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி, ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர், திருவெங்கடசாமி வீதியில் உள்ள மகிமாலீஸ்வரர் கோயில்களில் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதில், மகிமாலீஸ்வரர் கோயிலில் நடந்த அன்னாபிஷேக விழாவில் 150 கிலோ அரிசியால் வடிக்கப்பட்ட அன்னத்தாலும், ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலில் 100 கிலோ அன்னத்தாலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிவனை வழிபட்டு சென்றனர்.  இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதேபோல், ஈரோடு மாநகர் மற்றும் மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அனைத்து சிவலாயங்களிலும் நேற்று அன்னாபிஷேகம் சிறப்பாக நடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Annamasham ,Lord Shiva ,
× RELATED கொரோனா நெருக்கடியை சமாளிக்க இந்தியா...