இலவச எம்ப்ராய்டரி பயிற்சி துவக்கம்

ஈரோடு, நவ. 13: கனரா வங்கி தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி வரும் 20ம்தேதி  துவங்குகிறது. மத்திய அரசின் கிராமப்புற அமைச்சக வழிகாட்டுதலின்படி கனரா வங்கி தொழிற்பயிற்சி நிலையம் நடத்தும் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி வரும் 20ம் தேதி முதல் டிச.24ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஈரோடு கரூர் பைபாஸ் ரோடு கொல்லம்பாளையம் ஆஸ்ரம் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில் நடக்க உள்ள இலவச பயிற்சியில் பெண்கள், சுயஉதவிக்குழுக்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். பயிற்சி பெற தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், விபரங்களுக்கு கனரா வங்கி தொழிற்பயிற்சி நிலையத்தை தொடர்பு கொள்ள கனரா வங்கி முதுநிலை மேலாளர் சுதர்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags :
× RELATED மேம்பாலத்தை பஸ் ஸ்டாண்ட் வரை நீட்டிக்க வலியுறுத்தல்