×

மாவட்ட அளவிலான பேண்டு வாத்திய போட்டி

ஈரோடு, நவ.13: ஈரோட்டில் மாவட்ட அளவிலான பேண்டு வாத்திய போட்டி சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில், 250 மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். இந்த போட்டிகளை ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி துவக்கி வைத்தார். இதில், 5 கல்வி மாவட்ட அளவில் நடந்த போட்டியில் தேர்வான 10 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாண-மாணவிகள் பங்கேற்றனர்.  இதில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் ஒரு குழுவிற்கு 25 பேர் என 10 குழுவாக பிரிந்து தங்களது பேண்டு வாத்தியங்களை வாசித்தனர். ஒவ்வொரு பேண்டு வாத்திய குழுவினரும் தேசிய கீதம் தவிர தொடர்ந்து 7 நிமிடம் அவர்களது சொந்த வாத்திய திறமையை வெளிப்படுத்தினர். முதல் இடத்தினை பிடித்த பேண்டு வாத்திய குழுவினரை திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான பேண்டு வாத்திய போட்டிக்கு தகுதி பெற்றனர்.

Tags : band competition ,
× RELATED ஈரோட்டில் இன்று மின் நிறுத்தம்