நெல்லை புறநகர உள்ளாட்சியில் போட்டியிட அதிமுகவில் விருப்ப மனு

நெல்லை, நவ. 13:  நெல்லை புறநகரில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் வருகிற 15 மற்றும் 16ம் தேதிகளில் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது. இதுகுறித்து நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கேஆர்பி.பிரபாகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக தலைமை அறிவிப்பின்படி நெல்லை புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலங்குளம், தென்காசி, அம்பை, ராதாபுரம் மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனுக்களை நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே சேவியர் காலனியில் உள்ள புறநகர் மாவட்ட அலுவலகத்தில் பெறப்படுகிறது.

வருகிற 15 மற்றும் 16ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அமைப்பு செயலாளர்கள் மனோஜ்பாண்டியன், முருகையாபாண்டியன் எம்எல்ஏ, மகளிரணி செயலாளர் விஜிலாசத்யானந்த் எம்பி, தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் இன்பதுரை எம்எல்ஏ, செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ மற்றும் என்னிடம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். விண்ணப்பத்துடன் நகர்மன்ற தலைவர் பதவிக்கு ரூ.10 ஆயிரம், நகர்மன்ற வார்டு உறுப்பினர்களுக்கு ரூ.2,500, பேரூராட்சி மன்ற தலைவர் ரூ.5 ஆயிரம், உறுப்பினர்களுக்கு ரூ.1.500, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ரூ.5 ஆயிரம், ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு ரூ.3 ஆயிரம் கட்டண தொகையாக செலுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories:

>