பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் குத்தகை காலம் முடிந்த கடைகள் அகற்றம்

பாவூர்சத்திரம், நவ. 13: பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் குத்தகை காலம் முடிந்த 5 கடைகளில் இருந்த பொருட்களை அதிகாரிகள் அதிரடியாக அகற்றி பூட்டுப் போட்டனர். பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் குலசேகரப்பட்டி ஊராட்சிக்குக்குட்பட்ட 25க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளை  குத்தகைக்கு எடுத்து வியாபாரிகள் நடத்தி வருகின்றனர். இதனிடையே  பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் 2 கடையும், பஸ் நிலையம் வெளிப்புறத்தில் உள்ள 3 கடைகளும்  குத்தகை காலம் முடிந்தும் குலசேகரப்பட்டி ஊராட்சி வசம் ஒப்படைக்காமல் இருந்து வந்தது. இதையடுத்து கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில், கடைகளை ஒப்படைக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால் இதுவரை கடைகள் ஒப்படைக்கப்படாதநிலையில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், குத்தகை காலம் முடிந்த 5 கடைகளில் இருந்த பொருட்களை அகற்றி பூட்டுப் போட்டனர். இதையொட்டி பாவூர்சத்திரம் எஸ்ஐ பலவேசம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய  வட்டார வளர்ச்சி அலுவலர் ராதா மற்றும் தனி அதிகாரி சுந்தரராஜன், ஊராட்சி செயலர் வல்லாளமகாராஜன், முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்,

Related Stories:

>