கல்வி பரிசு வழங்கல்

வி.கே.புரம், நவ. 13: வி.கே.புரத்தில் பிஏகே அறக்கட்டளை சார்பில் தொழிற்சங்க ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி பரிசு வழங்கப்பட்டது.

வி.கே.புரத்திலுள்ள பாபநாசம் தொழிற்சங்க முன்னாள் தலைவர்  பிஏகே அறக்கட்டளை சார்பில் தொழிற்சங்க ஊழியர்களின் குழந்தைகளில் அரசு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. பாபநாசம் தொழிலாளர் சங்க தலைவர் சவுந்திரராஜன் தலைமை வகித்தார். சங்க முன்னாள் உப தலைவர் பாக்கியநாதன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் சுப்பையா வரவேற்றார். இதில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பிரமன் குழந்தைகள் துர்காதேவி,
Advertising
Advertising

ராம்குமார் மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அஜ்மீர்பாட்சா மகள் ஜரினாபர்வின், குழந்தைவேல் மகள் சுப்புலெட்சுமி, முத்தரசன் மகன் பிரசாந்த், ஜோசப் ராஜன் மகன் கிங்ஸ்டன்விமல் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து ரீச் மெட்ரிக் பள்ளியில் உள்ள ஆதரவற்ற குழந்தை களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. விழாவில் அறக்கட்டளை இயக்குநர்கள் கோமதிதேவி, டினேஸ்குமார், யக்னேஷ்குமார், மகேஷ்குமார் மற்றும் தலைமையாசிரியர் பன்னீர்செல்வம், சேனைத்தலைவர் பள்ளி தாளாளர் மரியபீட்டர்ராஜ்,  பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, சங்க பொருளாளர் கண்ணையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: