×

மது விற்றவர் கைது

களக்காடு, நவ. 13: களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் மற்றும் போலீசார், வடகரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பத்தமடை அருகே உள்ள கொழுமடையை சேர்ந்த மீனாட்சி (65) என்பவர் சாக்கு பையில் மதுபாட்டிகளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்களும், ரூ.120ம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags :
× RELATED மது விற்ற 9 பேர் கைது