×

சேர்ந்தமரம் அருகே பழுதான ரேஷன் கடை கட்டிடத்தில் விளையாடும் அங்கன்வாடி சிறார்கள்

சுரண்டை, நவ. 13:  சேர்ந்தமரம் அருகே இடிந்து விழும் நிலையில் காட்சியளிக்கும் ரேஷன் கடை கட்டிடத்தில் அங்கன்வாடி குழந்தைகள் விளையாடி வருகின்றனர். விபரீதம் நிகழும் முன் கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடையநல்லூர் தாலுகா சேர்ந்தமரம் அருகே உள்ள வேலப்பநாடாரூரில் ரேஷன் கடை உள்ளது. இந்த  கடை கட்டிடத்தின் மேற்கூரை சிமென்ட் காரைகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் பழுதடைந்து காணப்படுகிறது.

இதையடுத்து இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மிகவும் மோசமான நிலையில் இருந்த கட்டிடத்தில் இருந்து வாடகை கட்டிடத்திற்கு ரேஷன் கடை மாற்றப்பட்டது. பழுதடைந்து காணப்படும் ரேஷன் கடை கட்டிடம் அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. சுமார் 50 குழந்தைகள் படித்து வருகின்றனர். ரேஷன் கடை கட்டிடத்தில் பள்ளி குழந்தைகள், ஆபத்தின் விபரீதம் தெரியாமல் விளையாடி வருகின்றனர். எனவே பழுதான ரேஷன் கடையை இடித்து விட்டு புதிய கடை கட்டித்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : boys ,Pandamaram ,ration shop ,
× RELATED தார்ச்சாலையில் தேங்கிய மழைநீரில் குளித்து விளையாடும் சிறுவர்கள்