×

அம்பை ஜி.ஹெச்சில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்

அம்பை, நவ.13: அம்பை அரசு மருத்துவமனையில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடந்தது. அரசு சித்த மருத்துவப்பிரிவு சித்த மருத்துவ டாக்டர் உலகநாயகி தலைமை வகித்து பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், அம்பை சித்த மருத்துவமனையில்  தினமும் காலை தலா 30 மில்லி நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. அதேபோல் பேருந்து நிலையம் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பிரம்மதேசம் உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கும் கொண்டு சென்று வழங்கி வருகிறோம். காய்ச்சல் பாதித்தவர்கள், 3 மணி நேரத்திற்கு ஒருமுறை 30 மில்லி குடிநீர் குடித்து வர வேண்டும், என்றார். நிகழ்ச்சியில் அன்புமணி உள்ளிட்ட மருத்துவமனை பணியாளர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பெற்றோர் சங்கம் வலியுறுத்தல்...