திசையன்விளையில் சாலையை சீரமைக்க கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

திசையன்விளை, நவ. 13: திசையன்விளையில் இருந்து சாத்தான்குளம் செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திசையன்விளையில் இருந்து சாத்தான்குளம் செல்லும் சாலை, கடந்த 4 ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்தது. இச்சாலை முழுவதும் ஜல்லிகள் விரிக்கப்பட்ட நிலையில் உரிய பயன்பாட்டிற்கு உதவாத நிலையிலேயே உள்ளது. இதனால் இந்த சாலையில் உள்ள இரு கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் முருகேசபுரம், அழகியவிளை வழியாக சுமார் 4 கிமீ தூரம் சுற்றியே செல்கின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சரிசெய்ய வலியுறுத்தி திசையன்விளை பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில விவசாய பிரிவு செயலாளர் விவேக்முருகன் தலைமை வகித்தார். நகர தலைவர் ராஜன் முன்னிலை வகித்தார். கலைப்பிரிவு தலைவர் மருதூர்மணிமாறன் வரவேற்றார். முன்னாள் நகர தலைவர் பிலிப்போஸ் டேனியல், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் கூடங்குளம் நேசராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் நடராஜன், வேல்முருகன், பொன்ராஜ், ராம் , வர்த்தக பிரிவு ஐசக், வசந்தா, வேலம்மாள், வட்டார மகளிர் தலைவி பூமகள், கணேசன், கொடிஜெயராஜ், ராஜேஷ், முன்னாள் வட்டார தலைவர் கென்னடி, பிர்லா விஜயராஜன், முன்னாள் கவுன்சிலர் சூசைராஜ்,  ஐகோர்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.

Tags : demonstration ,roads ,
× RELATED அபாய நிலையில் அடுக்குமாடி...